×

கோவை கோயில் அருகே பாலிஷ் செய்யப்பட்ட மனித மண்டை ஓடு, எலும்புகள் பறிமுதல்: மாந்திரீகத்திற்கு பயன்படுத்தியதா?


கோவை: கோவையில் கோயில் அருகே கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகளால் பரபரப்பு நிலவியது. கோவை ராமநாதபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே நேற்று காலை 2 மனித மண்டை ஓடு மற்றும் சில எலும்புகள் கிடந்தன. ஒரு பிளாஸ்டிக் கவரில் எலும்புகள் குவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டு இருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று எலும்புகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எலும்புகள் அங்கே எப்படி வந்தன?, சுடுகாட்டில் இருந்து யாராவது கொண்டு வந்து வீசி சென்றார்களா?, மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் பயன்படுத்திய பின் தேவையில்லை என கொண்டு வந்து போட்டு விட்டார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனித மண்டை ஓடு, எலும்புகள் பாலிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒரு மண்டை ஓடு பாதி சமமான அளவில் துண்டிக்கப்பட்டிருந்தது. மருத்துவ பாடம் கற்பவர்கள் இது போன்ற எலும்புகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் அனுமதியின்றி இந்த மனித மண்டை ஓடு எலும்புகள் யார் எடுத்துச் சென்றார்கள்?, எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எப்படி பொது இடத்தில் வீசி சென்றார்கள்? என பல்வேறு சந்தேகங்கள் கிளப்பியிருக்கிறது. சுடுகாட்டில் இருந்து யாராவது எலும்புகளை தோண்டி கொண்டு வந்து போட்டு சென்றார்களா?, கொலை செய்து சடலத்திலிருந்து எடுத்து வந்த எலும்புகளா?, மாந்திரீகம், பில்லி சூனியத்திற்காக இந்த மனித எலும்புகள் பயன்படுத்தப்பட்டதா? என விசாரணை நடக்கிறது. எலும்புகளை வைத்து ஆணா, பெண்ணா? என அறிய முடியவில்லை. தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி விவரங்கள் பெறப்படும் என ராமநாதபுரம் போலீசார் தெரிவித்தனர்.

The post கோவை கோயில் அருகே பாலிஷ் செய்யப்பட்ட மனித மண்டை ஓடு, எலும்புகள் பறிமுதல்: மாந்திரீகத்திற்கு பயன்படுத்தியதா? appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ramanathapuram ,Goddess ,Kamatshi… ,
× RELATED கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல்...