×

கோவை போலீசாருக்கு பாராட்டு

 

கோவை, ஜூலை 21: கோவையில் சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், துடியலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 18 வீடுகளில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
சிங்காநல்லூர் மற்றும் பீளமேட்டில் நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம், நகை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் தேனி பெரியகுளத்தை சேர்ந்த ராடு மேன் என அழைக்கப்படும் மூர்த்தி (38) என்பவரையும் இவரது கூட்டாளியான தேனியை சேர்ந்த அம்சராஜ் (26) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் நடத்திய மெகா கொள்ளை விவரம் தெரியவந்தது. மூர்த்தி எப்போதும் இரும்பு ராடு வைத்து பூட்டிய வீட்டை திறந்து கொள்ளையடிப்பதால் இவருக்கு கொள்ளையர் வட்டாரத்தில் ராடு மேன் என அடைமொழி உருவானது. மூர்த்தி கடந்த 4 ஆண்டாக திருட்டு, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இவர் மீது மாநில அளவில் 68 கொள்ளை வழக்கு இருக்கிறது. இவர் இதுவரை எங்கேயும் போலீசில் சிக்கவில்லை.

முதல் முறையாக கோவையில் இவர் கைதாகி இருக்கிறார். இவரிடம் ஒரு கார், 6 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மூர்த்தி மீது மாநில அளவில் 68 கொள்ளை வழக்கில் 1500 பவுன் தங்க நகைகள், 1.76 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். இவர் தனது நகை பணத்தை மனைவி மூலமாக பல்வேறு இடங்களில் சொத்து வாங்கியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய விருதுநகர் பகுதி சுரேஷ், விருதுநகர் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய மூர்த்தியின் முக்கிய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கோவை மாநகர தனிப்படை போலீசார் டிஜிபி சங்கர் ஜிவாலை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

The post கோவை போலீசாருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Coimbatore Police ,Coimbatore ,Singhanallur ,Beelamedu ,Ramanathapuram ,Thudiyalur ,Beelamet ,
× RELATED போதையில் கார் ஓட்டுவதை தடுக்க கோவை...