×

ஊட்டி சாலையோரங்களில் பூத்து குலுங்கும் ரெட் லீப் மலர்கள்

ஊட்டி: ஊட்டி சாலையோர பகுதியில் பூத்துள்ள ரெட் லீப் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான மரங்கள், செடிகள் உள்ளன. இந்த செடி மரங்களில் ஒவ்வொரு சீசனில் மலர்கள் பூத்து குலுங்குவது வழக்கம். அந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதில், குறிப்பாக ஜெகரண்டா, செர்ரி, பிளேம் ஆப் தி பாரஸ்ட், சேவல் கொண்டை மலர்கள் மற்றும் ரெட் லீப் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் சிவப்பு இலைகளைக் கொண்ட சிறிய ரக மரங்கள் அதிக அளவு காணப்படுகின்றன.

இதை ரெட் லீப் மரங்கள் என அழைக்கப்படும். இந்த மரத்தின் அனைத்து இலைகளும் சிவப்பு நிறத்தில் காணப்படும். தற்போது அந்த மரத்தில் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த ரெட் லீப் மரத்தின் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர். ஊட்டி-அணிக்கொரை செல்லும் சாலையில் ரெட் லீப் மரங்களில் மலர்கள் அதிக அளவு பூத்து உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

The post ஊட்டி சாலையோரங்களில் பூத்து குலுங்கும் ரெட் லீப் மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்