சென்னை: வரலாறு காண பேரிடர் கால நெருக்கடியில் இருந்து பாதுகாப்பாக மீட்க அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளோடு இணந்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், வர்க்க – வெகுமக்கள் அமைப்புகளும் ஈடுபட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த சில நாட்களாக மிரட்டி வந்த மிக் ஜாம் புயல் வரலாறு காணாத பெரு மழையாக பெய்துள்ளது. சூறைக் காற்று ஆயிரக்கணக்கான மரங்களை முறித்து வீழ்த்தியுள்ளன. சென்னை பெரு மாநகரிலும் அதன் சுற்று வட்டாரப் புறநகர்களிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் தண்ணீர் தேங்கி, மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த போதும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அறுபதாயித்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைத்து, லட்சக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கும் பணியில் அரசும், மாநகராட்சியும் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த வரலாறு காண பேரிடர் கால நெருக்கடியில் இருந்து பாதுகாப்பாக மீட்க அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளோடு இணந்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், வர்க்க – வெகுமக்கள் அமைப்புகளும் ஈடுபட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post வரலாறு காணாத பேரிடர்… நிவாரண பணிகள் தொடரட்டும்: முத்தரசன் அறிக்கை appeared first on Dinakaran.
