×

செங்கோட்டை சாலையில் நிலச்சரிவு

செங்கோட்டை: வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையால் கேரள-தமிழக எல்லையான மேக்கரை, அச்சன்கோவில் கொடவாசல் உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் செங்கோட்டை-அச்சன்கோவில் சாலையில் நேற்று காலை செங்கோட்டை வழித்தடத்தில் அச்சன்கோவில் கே.எஸ்.ஆர்.டி.சி சேவை நிறுத்தப்பட்டது. மேக்கரை பகுதியில் மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது போல் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post செங்கோட்டை சாலையில் நிலச்சரிவு appeared first on Dinakaran.

Tags : Sengkottai Road ,Chenkottai ,Kerala- ,Tamil Nadu ,Makar ,Kodawasal ,Achanko ,Sengkot Road ,Dinakaran ,
× RELATED ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து...