- கடவூர் பொன்னனியாறு நீர்த்தேக்கம்
- கரூர்
- மாவட்ட கலெக்டர்
- தங்கவேல்
- தமிழ்
- நாடு சுற்றுலா
- கரூர் மாவட்டம்
- கடவூர் மாவட்டம் கடவூர் வட்டம் பொன்னனியாறு நீர்த்தேக்கம்
- தின மலர்
கரூர், டிச. 3: கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பொன்னணியாறு நீர்த்தேக்க வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ரூ.2.05 கோடி மதிப்பில் படகு குழாம் அமைக்கும் பணியை பார்வையிட்டார். கடவூர் வட்டம் பொன்னணியாறு நீர்த்தேக்க வளாகத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ரூ.2.05 கோடி மதிப்பில் படகு குழாம் அமைக்கும் பணி நடக்கிறது. அதன் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
பணியின் தன்மை, பணிகள் முடிவுறு காலம் ஆகியவற்றை கேட்டறிந்து, இந்த பணிகளை வரும் பிப்ரவரி மாதத்தில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பொன்னணியாறு நீர்த்தேக்கத்தின் பாசன பரப்பு, அணையின் நீர்த்தேக்க அளவு, நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது குறித்தும் மற்றும் பூங்காவின் பராமரிப்பு குறித்தும் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின் போது, கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் பொன்னணியாறு உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி சுற்றுலா அலுவலர் காமில் அன்சாரி, கடவூர் தாசில்தார் முனிராஜ் கலந்து கொண்டனர்.
விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
The post கடவூர் பொன்னணியாறு நீர்த்தேக்கத்தில் ₹2 கோடியில் படகு குழாம் அமைக்கும் பணி appeared first on Dinakaran.