×

சேலம் மேச்சேரியில் யானைகள் நுழைந்ததால் பரபரப்பு: யானை முன்பு செல்பி எடுக்க முயன்ற மாணவன் மீது தாக்குதல்

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக வனப்பகுதியிலிருந்து வன விலங்குகள் நகர் புறங்களில் சுற்றி திரிந்து வருகிறது. அந்த வகையில் யானைகள் நடமாட்டம் என்பது அதிகரித்துள்ளது.

அவை உணவு தேடி வனப்பகுதியில் இருந்து நகர் புரங்களுக்கு வருவது வழக்கமாகி வருகிறது . அந்த வகையில் இன்று மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி பகுதிக்குட்பட்ட சித்திக்குள்ளானூர் என்ற பகுதியில் நேற்று இரவு 2 காட்டு யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் தீபக் என்ற மாணவன் காட்டுயானைகள் முன்பு செல்பி எடுக்க முயன்றார். அப்போது யானை தாக்கி மாணவன் படுகாயமடைந்தான், பின்னர், மாணவன் மேச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கிராமத்திற்குள் நுழைந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து காட்டு யானை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சேலம் மேச்சேரியில் யானைகள் நுழைந்ததால் பரபரப்பு: யானை முன்பு செல்பி எடுக்க முயன்ற மாணவன் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Salem Mechery ,Salem ,Mecheri ,Salem Mecheri ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்