×

கடலாடி-கோவிலாங்குளம் சாலையில் சீமை கருவேல மரங்களால் போக்குவரத்து இடையூறு: உடனடியாக அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

 

சாயல்குடி, டிச. 2: கடலாடியிலிருந்து கோவிலாங்குளம் செல்லும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரம் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதால் அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடியிலிருந்து கோவிலாங்குளம் வழியாக கமுதி செல்ல சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலை உள்ளது. இச்சாலையை கடலாடி, மங்களம், ஆப்பனூர், கொம்பூதி, காத்தனேந்தல், மோயங்குளம், ஆரைக்குடி, ஒச்சதேவன்கோட்டை, பறையங்குளம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் கோவிலாங்குளம் முதல் கடலாடி வரையில் புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டது. தற்போது சாலையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது, வாகனங்கள் விலகும்போது சீமை கருவேல முள் காயங்களை ஏற்படுத்தி வருவதாக இருச்சக்கர வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். மேலும் கார் உள்ளிட்ட வாகனங்களின் முள் உரசி வாகனங்கள் சேதமடைந்து வருவதாக கூறுகின்றனர்.

இதனை போன்று மங்களத்திற்கும் மலட்டாறு பாலத்திற்கு இடையே இரண்டு இடங்களில் ஒரு சிமிண்ட் குழாய்கள் பொறுத்தப்பட்டு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் முறையாக பணிகள் நடக்காததால் சில மாதங்களிலேயே பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுவதால் அந்த இடத்திலும் விபத்துகள் நடந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். எனவே சீமை கருவேல மரங்களை அகற்றி, பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடலாடி-கோவிலாங்குளம் சாலையில் சீமை கருவேல மரங்களால் போக்குவரத்து இடையூறு: உடனடியாக அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cuddalady-Kovilangulam road ,Sayalkudi ,Kudladadi ,Kovilangkulam ,Kadladadi-Kovilangulam road ,Dinakaran ,
× RELATED பஸ்களை மீண்டும் இயக்கக் கோரி கடலாடியில் கடையடைப்பு