×

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

திருக்காட்டுப்பள்ளி, டிச.2: தோகூர்- திருச்சி மெயின்ரோட்டில் கால்நடைகளால் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தோகூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊரிலிருந்து திருச்சி சத்திரம் பேரூந்து நிலையத்திற்கும், வேங்கூர் திருவெறும்பூர் வழியாக திருச்சி ஜங்சன், சத்திரம் பேருந்து நிலையம் , காந்தி மார்க்கெட்டிற்கும் அரசு மற்றும் தனியார் பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையாக இந்த சாலை அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, போன்ற பகுதிகளிலிருந்து தினமும் அரசு, தனியார்துறை ஊழியர்கள், பள்ளிக் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், துவாக்குடி போன்ற பகுதியில் இருக்கும் தொழிற்பேட்டைகளுக்கு செல்வதற்கு இந்த வழிதடத்தில்தான் இரவு பகல் எந்த நே ரமும் பயணிக்கின்றனர்.

இந்த சாலையில் தோகூர் தென்னந்தோப்பு பகுதியில் பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் கால்நடைகள் சுற்றிதி திரிவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை அதன் உரிமையாளரிடம் பாதுகாப்புடன் பராமரிக்கவும் விபத்து ஏற்படுத்தினால் கால்நடை உரிமையாளரிடமே நஷ்டஈடு பெறவும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirukkatupalli ,Tokur-Trichy ,Dinakaran ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு