×

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து திமுக ஆலோசனை கூட்டம்

திருப்பூர், டிச.2: திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான செல்வராஜ் தலைமை வகித்தார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், கழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினருமான தென்றல் செல்வராஜ், 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தலைமை கழகத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.இக்கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் மேங்கோ பழனிசாமி, உசேன். மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, சிவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து திமுக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tirupur ,Tirupur North District ,South Assembly Constituency ,Rajarao ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் பிறந்தநாளை மாதம்...