×

புயல், கனமழை காரணமாக உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி ஒத்திவைப்பு

சென்னை: புயல், கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (2ம் தேதி) நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது புயல், கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படுகிறது. உலக மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு டிசம்பர் இரண்டாம் தேதி (இன்று) காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று (2ம் தேதி) முதல் டிசம்பர் 4ம் தேதி வரை சென்னையில் புயல், கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல்வர் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. இவ்விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

The post புயல், கனமழை காரணமாக உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : World Day of Persons with Disabilities ,CHENNAI ,International Day of Persons with ,Tamilnadu ,International Day of Persons with Disabilities ,Dinakaran ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...