×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் காக்க தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் அமைப்பு: அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை அரசிற்கு வழங்கும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, தலைவராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், உறுப்பினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர், உறுப்பினர் செயலராக பழங்குடியினர் நலத்துறை இயக்குனர், கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ), சித்ரா (ஏற்காடு தொகுதி எம்எல்ஏ),

வெ.மாறன் (சேலம்), கி.ரத்தினசாமி (கோவை), க.புஷ்பராணி (சேலம்), ஆ.பொன்னுசாமி (சேலம்), இரா.சரவணன் (திருவண்ணாமலை), ச.சாத்துக்குட்டி (கோவை), சு.மல்லிகா (கோவை), மூ.ராமசாமி (கள்ளக்குறிச்சி), வீரலட்சுமி (தேனி), ராஜசேகரன் (பெரம்பலூர்), மு.குணசேகரன் (திருவள்ளூர்), வ.தெய்வம் (மதுரை), அ.பாலாஜி (செங்கல்பட்டு), பழங்குடியினர் அல்லாத அலுவல் சாரா உறுப்பினர் கா.ராஜவேல் (திருவண்ணாமலை), ஆ.புஷ்பலீலா (கன்னியாகுமரி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் காக்க தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் அமைப்பு: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Tribal Council ,Chennai ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...