×

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக ‘நீயே உனக்கு ராஜா’ திட்டம் அறிமுகம்: 1300 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்ட இணையதளம் இளையா என்ற சாட்பாட் மற்றும் திறன் பயிற்சி சார்ந்த தகவல்கள் பெற்றுக்கொள்ளும் பொருட்டு 044-25252626 என்ற உதவி எண் ஐவிஆர்எஸ் ஒருங்கிணைந்த அழைப்பு மையத்துடன் கூடிய தளத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இருந்து வேலைவாய்ப்பு வேண்டி எந்த இளைஞர் அழைத்தாலும், அவர்களுக்கு பொருத்தமான திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை அவர்களின் மாவட்டம் அல்லது அருகாமையில் உள்ள மாவட்டங்களில் கண்டறிந்து இந்த இளையதளம் சார்ந்த அழைப்பு மையம் அவர்களுக்கு சரியாக வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட இளைஞர் திருவிழாக்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்பை பெற்ற 1300 பேருக்கு பணி நியமன கடிதங்களையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

The post தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக ‘நீயே உனக்கு ராஜா’ திட்டம் அறிமுகம்: 1300 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Skill Development Corporation ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED ஜாதி கொடுமைகளுக்கு எதிராக...