×

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் கூட மாநில அரசுக்கு இல்லையா? அமைச்சர் ரகுபதி கண்டனம்

சென்னை: பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரு மாநில அரசுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் கூட இல்லையா? இது எந்த வகையில் நியாயம் என்று அமைச்சர் ரகுபதி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை, ஜனாதிபதிக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஆளுநர் வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதற்காக ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை அனுப்பி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10 மசோதாக்களை நிறைவேற்றிஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த 18ம் தேதி அனுப்பி இருந்தோம். 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகிவுள்ள நிலையில் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளதாக ஒரு செய்தியை ஆளுநர் கூறியிருக்கிறார்.

ஒரு மாநில அரசுக்கு துணைவேந்தரை கூட நியமிக்கும் அதிகாரம் கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் ஒரு குழுவை நியமித்து அதில் ஆளுநரின் பிரதிநிதி, அரசு பிரதிநிதி, சிண்டிகேட் பிரதிநிதி என அனைவரும் உள்ளனர். அதன்படி, அந்த குழுவின் மூலம் ஒருவர் துணைவேந்தரை ஆளுநருக்கு பதிலாக தேர்ந்தெடுக்கலாம்.

The post துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் கூட மாநில அரசுக்கு இல்லையா? அமைச்சர் ரகுபதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi ,Chennai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...