×

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவு: 4ம் தேதி வெளியாகிறது

சென்னை: தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் 4ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 15ம் தேதி நடந்தது. இதில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 910 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் 750 அரசுப் பள்ளி மாணவர்களும், 750 அரசுப் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகைப்பள்ளி மாணவ மாணவியரும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.

மேற்கண்ட தேர்வு முடிவுகளை 4ம் தேதி காலை 11 மணிக்கு, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட உள்ளது. www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். ஊக்கத் தொகை பெறத் தகுதியுள்ள மாணவ மாணவியர் தொடர்பான விவரங்கள் அதே இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

The post தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவு: 4ம் தேதி வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Directorate of Government Examinations ,
× RELATED பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட...