×

நாடுமுழுவதும் 1.15 கோடி பென்சன்தாரர்களுக்கு டிஜிட்டல் உயிர் சான்றிதழ்

புதுடெல்லி: டிஜிட்டல் உயிர் சான்றிதழ் இயக்கத்தின் மூலம்,1.15 கோடி பென்சன்தாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓய்வூதியர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் விதமாக டிஜிட்டல் உயிர் சான்றிதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நாடு தழுவிய இரண்டாம் கட்ட இயக்கம் நவம்பர் 1 முதல் 30 வரை 100 நகரங்களில் நடந்தது. ஓய்வூதியர் நலத் துறை, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள்,ஓய்வூதியர் நலச் சங்கங்கள்,தனித்துவ அடையாள ஆணையம்,மின்னணுவியல்,தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. ஒன்றிய அரசு ஓய்வூதியர்கள் 38.47 லட்சம், மாநில அரசு ஓய்வூதியர்கள் 16.15 லட்சம், ஈ.பி.எஃப்.ஓ ஓய்வூதியர்கள் 50.91 லட்சம் என மொத்தம் 1.15 கோடி பேருக்கு டிஜிட்டல் உயிர் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் வெற்றிகரமாக நடைபெற உதவியதற்காக ஓய்வூதியர் நலத் துறை, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளுக்கு ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post நாடுமுழுவதும் 1.15 கோடி பென்சன்தாரர்களுக்கு டிஜிட்டல் உயிர் சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி விவகாரம் அமலாக்கத்துறை...