×

முக அழகுக்கு கடுகு எண்ணெய்

நன்றி குங்குமம் தோழி

கடுகு எண்ணெயை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்துவதில் இதன் பயன் அதிகம். இதிலுள்ள ஊட்டச் சத்துக்கள் ஏராளம்.
இது மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது.

* கடுகு எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, சிறிது உப்பு சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்த பின் வெது வெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

* கடலைமாவுடன் தயிர் கடுகு எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து முகம், கழுத்தில் பூசி மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து முகம் கழுவிவர முகம், சருமம் அழகாகும். வாரம் 2 முறை செய்யலாம்.

* 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். மேலும் பருக்களினால் ஏற்பட்ட வடு மறைந்து போகும்.

* கடுகு எண்ணெயை இரவு தூங்கப் போவதற்கு முன் உதடுகளில் தடவி வர உதட்டின் கருமை நீங்கும்.

* கடுகு எண்ணெயை சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து முடியில் தடவி வர முடி உதிர்வதை தடுத்து, அடர்த்தியான முடியை வளர்க்கும். இளநரை உள்ளவர்கள் கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இளநறை மறையும்.

* கடுகு எண்ணெயை சிறிது வாயில் ஊற்றி கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், ரத்தக் கசிவு, பற்களில் உண்டாகும் நோய்
தோற்றுகள் சரியாகும்.

* சூடாக்கி மூட்டுகளில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும். கடுகை அரைத்து பற்று போட வலி குறையும்.

* பசியுணர்வு குறைவாக உள்ளவர்கள் கடுகு எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட பசியுணர்வு தூண்டப்பட்டு செரிமானமாகும்.

* ரத்த காயங்களை ஆற்றும் தன்மை கடுகு எண்ணெய்க்கு உள்ளது. பாத புண்கள், படர்தாமரை போன்றவைகளுக்கும், பாதங்களில் தொற்றுகள் ஏற்படாமலிருக்கவும் கடுகு எண்ணெயை தடவி வந்தால் குணமாகும்.

– எம். வசந்தா, சென்னை.

The post முக அழகுக்கு கடுகு எண்ணெய் appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED கறுப்பு உலர் திராட்சையின் நன்மைகள்!