×

காசாவில் மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

காசா: தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து காசா மீது மீண்டும் தாக்குதலைத் இஸ்ரேல் தொடங்கியது. நவ. 24-ம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் முடிவடைந்ததால் ஹமாஸ் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் – ஹமாஸிடம் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை. போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுத குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே 7 நாட்கள் நீடித்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

The post காசாவில் மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் appeared first on Dinakaran.

Tags : Israel ,Gaza ,Dinakaran ,
× RELATED தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது...