×

அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைத்து திறப்பு விழா செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து..!!

சென்னை: அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைத்து திறப்பு விழா செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, 19ம் நூற்றாண்டில் புரட்சிகரமான கருத்துகளைத் துணிச்சலுடன் முன்வைத்த சிந்தனையாளர். சாதி ஒடுக்குமுறைகளை எதிர்த்து நின்ற தலைவர், இதழாசிரியர், தமிழ் அறிஞர், சித்த மருத்துவர் என பன்முகங்களைக் கொண்ட பண்டிதர் அயோத்தி தாசர்.

அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட சிலையை இன்று (டிச.1) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் செய்தி மகிழ்ச்சிகரமானது‌.’அரிச்சந்திரன் பொய்கள்’, ‘திருவள்ளுவர் வரலாறு’, ‘புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி’ உட்பட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய அவரின் ஆய்வுகளும், அனுமானங்களும் கவனிக்கத்தக்கவை. புத்தம் குறித்தும், தமிழ் மக்களின் மேம்பாடு குறித்தும் தனது ‘தமிழன்’ இதழில் எழுதி பரப்பிய அவர், சாதி-மத பிற்போக்கு ஒழிக்கப்பட்ட சமத்துவத்திற்காக நின்ற முன்னோடி.‌ இந்நாளில் அயோத்தி தாசரின் நினைவை போற்றிடுவோம் என்று கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

The post அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைத்து திறப்பு விழா செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Tamil Nadu government ,Pandit Ayodhya ,Chennai ,Tamil Nadu ,Communist Party ,Communist Party of Tamil Nadu ,Ayodhya Pandithar ,
× RELATED ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம்...