×

தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது..!!

சென்னை: தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு , 07.10.2023 (சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது . 1,27,673 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர். இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( 500 மாணவர்கள் 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000 ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ 10,000 வழங்கப்படும் .

தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியானது. திறனறித் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எனவே இத்தேர்வெழுதிய மாணாக்கர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் சென்று TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் மாணாக்கர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

The post தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் அனைத்து மருந்து...