×

சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு..!!

சென்னை: சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு, வரும் 17ம் தேதி சேலத்தில் நடக்கிறது. இளைஞரணியின் முதல் மாநாடு 2007ல் நடைபெற்ற நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. 5 லட்சம் பேர் வரை பங்கேற்க திமுக இளைஞரணி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடைப்பெற இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று திமுக தரப்பில் மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். திமுக இளைஞரணியின் மாநாடு என்பதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மட்டுமே இதுவரை அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த சூழலில் மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோவை திமுகவின் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், தனுஷ்குமார் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைப்பதற்கு திமுக தரப்பில் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை திமுக கூட்டணி சேலத்தில் தொடங்குகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

The post சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : DMK Youth Conference ,Salem ,Chennai ,2nd DMK youth conference ,Allies ,DMK ,conference ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்