×

சிறப்பான செயல்பாடுகளால் கவனம் ஈர்ப்பு நகர்ப்புற சுகாதார நிலையங்களில் அதிகரித்து வரும் மகப்பேறு சிகிச்சை

சேலம், டிச.1: சேலம் மாநகராட்சியில் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், மகப்பேறு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் சராசரியாக 100க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. கடந்த 11 மாதங்களில் 1,101 சுகப்பிரசவங்கள் நடந்துள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதியில் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், சராசரியாக மாதம் 60 முதல் 70 சுகப்பிரசவங்கள் நடைபெற்று வந்தன. முதல் முறையாக நடப்பாண்டில், தொடர்ந்து 7 மாதமாக மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்கள் நடந்துள்ளன. இதில், தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், அதிக சுகப்பிரசவங்கள் நடந்துள்ளன. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், கர்ப்பிணிகளின் நலனை காக்கும் வகையில் கர்ப்பம் குறித்த விளக்கம் மற்றும் சந்தேகங்கள், யோகா வகுப்பு நடத்தப்படுகின்றன.

கருவுற்ற பெண்ணுக்கு ஏற்படும் உயர் அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோய், வலிப்பு, தைராய்டு, இதயம், ரத்தக் கோளாறுகள் ஆஸ்துமா, நோய் தொற்றுகள் உள்ளிட்டவற்றை கண்டறிய தேவையாக ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம், ₹18ஆயிரம் வரை நிதியுதவி, தாய் சேய் நல பெட்டகம் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதனால், கர்ப்பிணிகள் ஆர்வத்துடன் நகர்ப்புற ஆரம்ப நிலையங்களை நோக்கி வருகின்றனர். ஒவ்வொரு கர்ப்பிணியும் ஆரம்ப முதல் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால், பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, தக்க ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் தேவை இன்றி செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் சுகப்பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாநகராட்சியில் கடந்த ஜூனில் 105, ஜூலையில் 102, ஆகஸ்ட் மாதத்தில் 121, செப்டம்பரில் 117, அக்டோபரில் 103, நவம்பரில் 105 என்பது உள்பட நடப்பாண்டில் மொத்தம் 1,101 சுகப்பிரசவங்கள் நடந்துள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் மாநகரில் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்காக தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து ரத்த பரிசோதனைகள், இதர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் நடைபெறும் கர்ப்பிணிகளுக்கான பரிசோதனையில் சராசரியாக 50 முதல் 60 நபர்கள் பங்கு பெற்று ஆலோசனை பெற்று வருகின்றனர். அவர்களின் நலனை காக்கும் வகையில் கர்ப்பம் குறித்த விளக்கம் மற்றும் சந்தேகங்கள், யோகா வகுப்பு நடத்தப்படுகின்றன.

கருவுற்ற பெண்ணுக்கு ஏற்படும் உயர் அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோய், வலிப்பு, தைராய்டு, இதயம், ரத்தக் கோளாறுகள் ஆஸ்துமா ,நோய் தொற்றுகள் உள்ளிட்டவற்றை கண்டறிய தேவையாக ரத்த பரிசோதனை ,ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதனால், கர்ப்பிணிகள் ஆர்வத்துடன் நகர்ப்புற ஆரம்ப நிலையங்களை நோக்கி வருகின்றனர். ஒவ்வொரு கர்ப்பிணியும் ஆரம்ப முதல் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால் பிரவச காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு தக்க ஆலோசனை, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற சிறப்பான செயல்பாடுகளால், நடப்பாண்டில் 11 மாதத்தில் 1101 சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.

மாநகரில் 25 நகர்ப்புற நல்வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கும், தலா ஒரு மருத்துவர், ஒரு சுகாதார ஆய்வாளர், செவிலியர், சுகாதார பணியாளர் நியமிக்கப்பட்டு பொது மக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர். சுகாதார துறையை மேம்படுத்தும் வகையில் தேசிய நகர்ப்புற சுகாதாரத திட்டத்தின் கீழ் ₹7.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9வது வார்டு தாதம்பட்டியில் புதியதாக ₹1.20 கோடியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடங்கள் தலா ₹60 லட்சத்தில் கட்டப்படுகிறது. 12 துணை சுகாதார நிலையங்கள் தலா ₹30 லட்சத்தில் கட்டப்படுகிறது. இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post சிறப்பான செயல்பாடுகளால் கவனம் ஈர்ப்பு நகர்ப்புற சுகாதார நிலையங்களில் அதிகரித்து வரும் மகப்பேறு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Corporation ,
× RELATED சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள...