×

ஜெயங்கொண்டத்தில் கல்வி இணைச் செயல்பாடு போட்டிகள்

ஜெயங்கொண்டம், டிச.1: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கல்வி இணை செயல்பாடுகளான இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம் வினாடி வினா, வானவில் மன்றம் சார்பில் 10 வகையான போட்டிகள் நடைபெற்றன. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி வழிகாட்டு நெறிமுறைகளின் படி நவம்பர் 24,28,29,30 ஆகிய 4 நாட்கள் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார் தலைமை வகித்து போட்டிகளை துவங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ் இராசாத்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் ஏற்பாடுகளை செய்து வரவேற்றார். பள்ளிக் கல்வி துணை ஆய்வாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

இப்போட்டிகளில் 43 பள்ளிகளில் இருந்து 774 மாணவர்கள் கலந்து கொண்டனர். நடுவர்களாக ஆசிரியர் பயிற்றுனர் டேவிட் ஆரோக்கியராஜ், புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் செங்குட்டுவன், உதயநத்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளி கலை ஆசிரியர் அறிவுச்செல்வன், ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் அறிவியல் ஆசிரியர் பிரகாஷ், சின்னவளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் இராஜதுரை, உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் இராமலிங்கம், வானவில் மன்ற கருத்தாளர்கள் அருள்ஜோதி, கௌசல்யா ஆகியோர் செயல்பட்டனர்.

சிறார் திரைப்படம் போட்டி தனிநபர் நடிப்பு பிரிவில் கங்கைகொண்ட சோழபுரம் ஜனனி, ஜெயங்கொண்டம் மாதிரி மேல்நிலைப் பள்ளி அமுதா, உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேவி முறையே முதல் 3 இடங்களை பெற்றனர். குறும்படம் தயாரித்தல் பிரிவில் மேலகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அர்ச்சனா, உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மகளிர் பிரித்திகா, சூரியமணல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி விஷ்வா முறையே முதல் 3 இடங்களை பெற்றனர். கதை விமர்சனம் பிரிவில் செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ராஜசுவனேஷ், சூரியமணல் நடுநிலைப்பள்ளி அபி, உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆதில் உசேன் முறையே முதல் 3 இடங்களை பெற்றனர்.

வினாடி வினா போட்டியில் மேலகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய பள்ளி சரண்யா, வாணவநல்லூர் நடுநிலைப்பள்ளி விஸ்வா, செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சந்திரமௌலி முறையே முதல் 3 இடங்களை பெற்றனர். வானவில் மன்றம் போட்டியில் அறிவியல் கண்காட்சி பிரிவில் செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி கமலேஷ், கடாரம்கொண்டான் நடுநிலைப்பள்ளி புவியரசு, மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பிரியதர்ஷன் முதல் 3 இடங்களை பெற்றனர்.

அறிவியல் செயல் திட்டம் பிரிவில் மேலகுடியிருப்பு அரசு நடுநிலைப்பள்ளி சபரிவாசன், கல்லாத்தூர் தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளி கனகவேல், இடையார் அரசு நடுநிலைப்பள்ளி தமிழ்ச்செல்வன் முதல் 3 இடங்களை பெற்றனர். அறிவியல் நாடக பிரிவில் கச்சிபெருமாள் அரசு நடுநிலைப்பள்ளி புவனேஸ்வரி, ஜெயங்கொண்டம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி பாக்யா, சுண்டிபள்ளம் அரசு நடுநிலைப்பள்ளி மணிகண்டன் முதல் 3 இடங்களை பெற்றனர். முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் அரியலூரில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

The post ஜெயங்கொண்டத்தில் கல்வி இணைச் செயல்பாடு போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Jayangonda ,Jeyangondam ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே வயலில் இறந்து கிடந்த மயில்