×

தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க சூரங்குடி பள்ளி மாணவிகள் தேர்வு

நாகர்கோவில், டிச.1: தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க சூரங்குடி அரசு பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லுரியில் வைத்து நவம்பர் 25, 26ம் தேதிகளில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் சூரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பில் பயிலும் வீ.அனுலின், மு.மகாலெட்சுமி ஆகிய இரு மாணவியரும் மாநில அளவில் தேர்வாகி உள்ளனர். இம்மாணவியர் அடுத்த மாதம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வைத்து நடைபெற உள்ள தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். மாணவியரை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் விஞ்ஞானிகள், பள்ளி தலைமை ஆசிரியர், வழிகாட்டி ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.

The post தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க சூரங்குடி பள்ளி மாணவிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Surangudi ,National Science Conference ,Nagercoil ,Surangudi Government School ,Tamil Nadu Science Movement ,Dinakaran ,
× RELATED குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை...