×

காஞ்சியில் பழங்குடியினருக்காக ரூ.1937 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி: கலெக்டர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரூ.1937.81 லட்சம் மதிப்பீட்டில் பழங்குடியினருக்காக கட்டப்படும் வீடுகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற பழங்குடியின குடும்பங்களுக்காக விப்பேடு, ஊத்துக்காடு, சிங்காடிவாக்கம், காட்ரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில், ரூ.1937.81 லட்சம் மதிப்பீட்டில் 443 பழங்குடியினர் குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி மற்றும் ரூ.119.48 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கலெக்டர் கலைச்ெசல்வி மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பழங்குடியின மக்களுக்காக வீடுகள் கட்டும் பணிகளை விரைவுப்படுத்தவும், குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை விரைவில் முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

The post காஞ்சியில் பழங்குடியினருக்காக ரூ.1937 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி: கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Kanchipuram ,Kanchipuram district ,Kalachelvi Mohan ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...