×

எவ்வளவு பெருமழை பெய்தாலும் சமாளிக்க தயார்!: 60 ஆண்டாக நீர் தேங்கிய சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை.. அமைச்சர் சேகர்பாபு பேட்டி..!!

சென்னை: 60 ஆண்டாக மழை பெய்தபோதெல்லாம் நீர் தேங்கிய பிரகாசம் சாலை, என்எஸ்சி போஸ் சாலையில் நீர் தேங்கவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனை பகுதியில் மழை பாதிப்புகளை அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, தொடர் மழையால் ஒரு சில தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களும் தூர்வாரப்பட்டுள்ளன. மழைநீர் வடிந்து செல்லும் அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

இரவு முதல் முதல்வர் எங்களை இயக்கியபடி இருந்தார்:

நேற்றிரவு முதல் முதலமைச்சர் தூங்காமல் செல்போனில் எங்களை இயக்கியபடி இருந்தார் என்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நேற்று கனமழை பெய்ததால் இரவு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். எங்கெல்லாம் நீர்த்தேக்கம் என தகவல் வந்ததோ அங்கு செல்ல எங்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். எவ்வளவு பெருமழை பெய்தாலும் அதை சமாளிப்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராகவே உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

The post எவ்வளவு பெருமழை பெய்தாலும் சமாளிக்க தயார்!: 60 ஆண்டாக நீர் தேங்கிய சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை.. அமைச்சர் சேகர்பாபு பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : MINISTER ,SEKARBABU ,Chennai ,Prakasam Road ,NSC Bose Road ,Sekarbaba ,Dinakaran ,
× RELATED குத்தம்பாக்கம் புதிய பேருந்து...