×

தேங்கிய மழை நீரை உடனுக்குடன் அகற்றிய சென்னை மாநகராட்சிக்கு அண்ணாமலை பாராட்டு!!

சென்னை: தேங்கிய மழை நீரை உடனுக்குடன் அகற்றிய சென்னை மாநகராட்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை மழையில் கீழ்நிலை ஊழியர்கள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை கடுமையாக உழைக்கின்றனர். சென்னையில் சிறிய மழைக்கு தண்ணீர் தேங்குவது இல்லை, கனமழைக்கு தேங்கும் தண்ணீர் உடனுக்குடன் உறிஞ்சப்படுகிறது. கனமழை காரணமாக 5ம் தேதி வரை நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.6-ம் தேதியில் இருந்து நடைபயணம் தொடரும் என்று அவர் கூறினார்.

The post தேங்கிய மழை நீரை உடனுக்குடன் அகற்றிய சென்னை மாநகராட்சிக்கு அண்ணாமலை பாராட்டு!! appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai Corporation ,CHENNAI ,BJP ,Chennai Municipal Corporation ,State President ,
× RELATED திருப்போரூர் தொகுதியில் அண்ணாமலை இன்று பாதயாத்திரை