×

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தமிழ்நாடு அணிக்கு வீரர்கள் தேர்வு: இன்று முதல் டிச.2 வரை சென்னையில் நடக்கிறது

தேனி, நவ. 30: கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு அணி சார்பில் விளையாட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு இன்று முதல் வருகிற டிச.2ம் தேதி வரை சென்னையில் நடக்க உள்ளது. 2023ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் இவ்வாண்டு தமிழ்நாட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடக்க உள்ளது.

இதில் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால், பளூதூக்குதல், ஸ்குவாஷ், சைக்கிள் ஓட்டுதல், வில்வித்தை, நீச்சல், மல்லக்கம்பு, டேபிள்டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, களிரிபயட்டு, கபடி, ஜூடோ, கோகோ, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, கட்கா, யோகாசனம், டென்னிஸ், தாங்தா, சிலம்பம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதில் கூடைப்பந்து, கபடி, கோகோ, வாலிபால், ஹாக்கி மற்றும் கால்பந்து ஆகிய குழு விளையாட்டுக்களில் தமிழ்நாட்டு அணி இடம்பெற உள்ளது. எனவே தமிழ்நாடு அணி சார்பில் விளையாட உள்ள வீரர்கள், வீராங்கனைகள் தே்ாவு இன்று முதல் வருகிற டிச.2ம் தேதி வரை சென்னையில் நடக்க உள்ளது. கால்பந்து வீராங்கனைகளுக்கான தேர்வு இன்றும் (நவ. 30), வீரர்களுக்கான தேர்வு நாளை (டிச.1) மற்றும் நாளை மறுதினமும் (டிச.2) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்க உள்ளது.

கபடி போட்டிக்கான வீராங்கனைகள் தேர்வு இன்றும் ,வீரர்களுக்கான தேர்வு நாளையும் (டிச.1) சென்னையில் நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடக்க உள்ளது. கோகோ போட்டிக்கான வீராங்கனைகள் தேர்வு இன்றும், வீரர்களுக்கான தேர்வு நாளையும் (டிச.1) சென்னையில் நேருபூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடக்க உள்ளது.

வாலிபால் போட்டிக்கா வீராங்கனைகள் தேர்வு இன்றும், வீரர்களுக்கான தே்ாவு நாளையும் (டிச.1) சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்க உள்ளது. ஹாக்கி போட்டிக்கான வீராங்கனைகள் தேர்வு இன்றும், வீரர்களுக்கான தே்ாவு நாளையும் (டிச.1) சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்க உள்ளது.

கூடைப்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு நாளை பெண்களுக்கும், நாளை மறுதினமும் (டிச.2) ஆண்களுக்கும் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க உள்ளது. இப்போட்டிகளில் விளையாட தகுதி பெற்றவர்கள் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் வருகிற 2024ம் ஆண்டு ஜன.19ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை நடக்க உள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டு பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தகுதி போட்டிகளில் பங்கேற்பதற்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி கல்வி சான்றிதழ்கள், 2013ம் ஆண்டு ஜன.1ம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்களுடன் போட்டிகளில் பங்கேற்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

The post கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தமிழ்நாடு அணிக்கு வீரர்கள் தேர்வு: இன்று முதல் டிச.2 வரை சென்னையில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Gallo India Games ,Chennai ,Theni ,Gallow India Games ,Dinakaran ,
× RELATED திருச்சியில் இருந்து சென்னை நோக்கி...