×

கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு போலி டாக்டர் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இந்திலி மேற்கு காட்டுக்கொட்டாய் முயல்குன்று பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(43). இவர் சட்டவிரோதமாக கருகலைப்பு செய்வதாக வந்த தகவலின்படி பாலின தேர்வை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழு டிஎஸ்பி சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் சின்னசேலம் போலீசார் நேற்று முருகேசன் வீட்டிற்குள் சோதனை நடத்தினர். அப்போது 10ம் வகுப்பு வரை படித்துள்ள முருகேசன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொண்டது தெரிந்தது.

அப்போது அதிகாரிகளை பார்த்ததும் கர்ப்பிணிகள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து முருகேசன் வீட்டில் சோதனை செய்தனர். அதில் பரிசோதனை கருவி, கை உறை, கருகலைப்பிற்கு பயன்படுத்தக்கூடிய மருந்து, மாத்திரைகள், 2 கார், பைக், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து முருகேசனுக்கு சொந்தமான ₹2 கோடி மதிப்பிலான வீட்டுக்கு (கருகலைப்பு மையம்) சீல் வைத்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். முருகேசன் மீது ஏற்கனவே கருகலைப்பு செய்த விவகாரத்தில் சின்னசேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது 4வது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு போலி டாக்டர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Muaykunnu ,Indili West Kattukottai ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி உயிரிழந்த...