×
Saravana Stores

இளம்பெண்களின் 13,000 நிர்வாண புகைப்படங்கள் வைத்திருந்த வாலிபர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் பெல்லாந்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு பிபிஓவில் ஆதித்யா சந்தோஷ் என்ற 25 வயது வாலிபர் 5 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் வேலைக்கு சேர்ந்ததிலிருந்தே நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 22 வயது இளம்பெண் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாற, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஆதித்யா சந்தோஷின் செல்போனை நித்யா பார்த்தபோது, அதில் தனது புகைப்படங்கள் மற்றும் சக பெண் ஊழியர்கள் பலரது புகைப்படங்கள் உட்பட இளம்பெண்களின் 13,000 நிர்வாண புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நித்யா, தனது அலுவலகத்தில் சீனியர்கள் உட்பட அனைத்து பெண்களிடமும் கடந்த 20ம் தேதி இதுதொடர்பாக எச்சரித்தார்.  இதையடுத்து, ஆதித்யா சந்தோஷ் மீது புகார் அளித்தார். போலீசார், பரிசோதித்ததில், 13,000 நிர்வாண புகைப்படங்களில் பாதி உண்மை மற்றும் பாதி மார்பிங் செய்யப்பட்டவை என்பதை கண்டறிந்தனர். இது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண்களின் 13,000 நிர்வாண புகைப்படங்கள் வைத்திருந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Aditya Santosh ,Bellandur ,
× RELATED ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை;...