×

அமைச்சர் எ.வ.வேலு தகவல் பொதுப்பணித்துறை கட்டிடப்பணிகள் அனைத்தும் கணினிமயமாகிறது

சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கில், பொதுப்பணித்துறையில் மூலம் கட்டப்படும் கட்டிடங்களில், “உள்கட்டமைப்பின் நவீன தொழில்நுட்பம்“ குறித்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து, “கட்டிட மலர்“ காலாண்டு இதழை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் உதவியுடன் தொடக்கம் முதல் இறுதி வரை, ஒப்படைக்கப்பட்ட பணிக்கான செயல்பாடுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. “கட்டிட மலர்” என்ற கட்டுமான பொறியியல் சம்பந்தமான காலாண்டு இதழ் பொதுப்பணித்துறை மூலம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், முதன்மைத் தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் மற்றும் மண்டல தலைமைப் பொறியாளர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் எ.வ.வேலு தகவல் பொதுப்பணித்துறை கட்டிடப்பணிகள் அனைத்தும் கணினிமயமாகிறது appeared first on Dinakaran.

Tags : Minister ,A. V. Velu ,Public Works Department ,Chennai ,Kalaivanar Arena, Chennai ,
× RELATED கட்டுமான பொருட்கள் விலையேற்றம்...