×

நாட்டுப்புற கலைப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடக்கம்: கலை பண்பாட்டுத்துறை அறிவிப்பு

சென்னை: 2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் போது, நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும். இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும். மாநிலம் முழுவதும் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, வாயிலாக ஆணை வெளியிடப்பட்டது.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளிலும், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளிலும், மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், இராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளிலும் மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் ஆகிய 25 இடங்களிலும் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் நான்கு வகையான நாட்டுப்புறக் கலைகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.

இக்கலைப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை 25 நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்களிலும் 1.12.2023 முதல் தொடங்கிடவும். பயிற்சியானது 1.1.2024 முதல் தொடங்கிடவும் துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாட்டுப்புறக் கலையில் ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பணிக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள் ஆகியோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

The post நாட்டுப்புற கலைப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடக்கம்: கலை பண்பாட்டுத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Folk Art Festival ,Department of Arts and Culture ,Chennai ,Folk Art ,
× RELATED கலை பண்பாட்டுத் துறையின் கீழ்...