×

நவம்பர் இறுதியில் 16வது நிதிக்குழுவை அமைக்க ஒன்றிய அரசு முடிவு..!!

டெல்லி: நவம்பர் இறுதியில் 16வது நிதிக்குழுவை அமைக்க ஒன்றிய அரசுமுடிவு செய்துள்ளது. நவம்பர் இறுதியில் 16வது நிதிக்குழுவுக்கான வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதன் பல செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 1, 2026 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வரி பிரிக்கப்பட வேண்டிய விகிதத்தை ஆணையம் பரிந்துரைக்கிறது.

இலவச ரேஷன் அரிசி திட்டத்தை செயல்படுத்த ரூ.24,000 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் உள்ள 80 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ரேஷன் அரிசி திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 15,000 பேருக்கு லோன்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post நவம்பர் இறுதியில் 16வது நிதிக்குழுவை அமைக்க ஒன்றிய அரசு முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,16th Finance Commission ,Delhi ,Dinakaran ,
× RELATED அரசு துறைகளையும் காவிமயமாக்குவதா?: தமிழச்சி தங்கப்பாண்டியன் கண்டனம்