×

கடலூரில் சாலையோர ஆக்கிரமிப்பு இரவோடு இரவாக அகற்றம்

கடலூர், நவ. 29: கடலூர் மாநகரத்தில் பிரதான சாலைகள், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. கடலூரில் உள்ள லாரன்ஸ் சாலை, நெல்லிக்குப்பம் சாலை, நேதாஜி சாலை, முதுநகர் சாலை என அனைத்து பிரதான சாலை பகுதிகளிலும் சாலையோரங்களில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், வியாபாரிகள் தங்களது வியாபார பெயர் பலகைகள், உணவகங்களின் பொருட்கள் உள்ளிட்டவைகளை வைத்துக்கொண்டு நடைபாதையையும், சாலை ஓரப்பகுதிகளையும் ஆக்கிரமித்து செயல்படுவது தொடர்கதையாகி உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் காரணமாக சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு இடமில்லாமல் தவிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது. மேலும் விபத்துகள் ஏற்படுவதும் தொடர் கதையாகியுள்ளது. இதுபோன்ற நிலைபாட்டில் மாவட்ட நிர்வாகம் சாலையோர பகுதிகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். போக்கு

வரத்துக்கு பாதிப்பில்லாத நிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் உதவிட வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்து இருந்தது. இதற்கிடையே நேற்று இரவோடு இரவாக புதுநகர் பகுதியில் உள்ள பாரதி சாலை, நெல்லிக்குப்பம் சாலை, நேதாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை, உணவகங்களின் பொருட்களை அகற்றினர். மேலும் கடை மற்றும் வர்த்தக நிறுவனம் வைத்துள்ளவர்கள் தங்களது கட்டுப்பாட்டிலும், தங்களது சொந்த பகுதிக்குள் செயல்பட வேண்டும். சாலையோர நடைபாதை உள்ளிட்ட பொது இடங்களில் ஆக்கிரமிப்பு மேற்கொண்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர். போலீசாரின் நடவடிக்கையால் கடலூரில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

The post கடலூரில் சாலையோர ஆக்கிரமிப்பு இரவோடு இரவாக அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Lawrence ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை