×

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உலக குறைபிரசவ குழந்தைகள் நாள் அனுசரிப்பு

சென்னை:  பச்சிளம் குழந்தைகள் விழிப்புணர்வு வாரத்தையொட்டி எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உலக குறைபிரசவ குழந்தைகள் நாள் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் நவம்பர் 15ம் தேதி முதல் நவம்பர் 21ம் தேதி வரை பச்சிளம் குழந்தைகள் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று உலக குறைபிரசவ குழந்தைகள் நாள் அனுசரிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 50 சதவீதமாகவும், தமிழகத்தில் 30 சதவீதமாகவும் உள்ளது. அதில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு 15 சதவீதமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைகளின் இறப்பிலேயே குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் தான் அதிகமாக உள்ளது. பெண்கள் சிறிய வயதில் திருமணம் செய்வதாலும், பதின் பருவத்தில் கர்ப்பமடைவதாலும் குறைபிரசவம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும். மேலும், வீட்டில் மிச்சமான உணவுகளை பெண்கள் சாப்பிடுவதால், அவர்களுக்கு ரத்தசோகை பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பெண்கள் பூப்பெய்வதில் இருந்து திருமணமாகி செல்வது வரை, நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டால் குறை பிரசவத்தை தவிர்க்க முடியும். அதேபோல் குழந்தையின்மைக்கான சிகிச்சை பெறும் பெண்களுக்கு, ஒரே நேரத்தில் 2 அல்லது 3 குழந்தைகளுக்கான கரு உருவாகும். இதனாலும், குறைபிரசவங்கள் வாய்ப்பு அதிகமாக இருக்கும். தமிழகத்தில் 73 இடங்களில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளது. எனவே பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம் இருக்கும் மருத்துவமனையில் மட்டுமே பிரசவத்துக்காக கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட வேண்டும். ஊரடங்கு காலத்தில் சரியான ஊட்டச்சத்து உணவுகள் கிடைக்காததால் தற்போது தமிழகத்தில் குறைபிரசவம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உலக குறைபிரசவ குழந்தைகள் நாள் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : World Prematurity Day ,Egmore Children ,Hospital ,CHENNAI ,Egmore Children's Hospital ,Pacchilam Child Awareness Week ,Dinakaran ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...