×

பிரதம மந்திரி திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்: கலெக்டர் தகவல்

 

திருப்பூர், நவ.29: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2023-2024ம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்தல், பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, கொத்தமல்லி ஒரு ஏக்கருக்கு ரூ.622.50 ஜனவரி மாதம் 2ம் தேதிக்குள்ளும், வெங்காயம் ஒரு ஏக்கருக்கு ரூ.2,227.50க்கும் வருகிற ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள்ளும், மிளகாய் ஒரு ஏக்கர் ரூ.1,257.50க்கும் ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள்ளும், தக்காளி ஒரு ஏக்கர் ரூ.1,495க்கும் ஜனவரி 31ம் தேதிக்குள்ளும், வாழை ஒரு ஏக்கருக்கு ரூ.4,900.50க்கும் பிப்ரவரி மாதம் 29ம் தேதிக்குள்ளும், மரவள்ளி ஒரு ஏக்கருக்கு ரூ.1,720க்கும் பிப்ரவரி மாதம் 29ம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்துகொள்ளலாம்.

எனவே இதுவரை ராபி பயிர்களை காப்பீடு செய்யாத, காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி, இத்திட்டத்தில் காப்பீடு தொகை செலுத்தி பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பிரதம மந்திரி திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur District ,Collector ,Kristaraj ,Dinakaran ,
× RELATED காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது!!