×

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் துபாய் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி

பெங்களூரு: கர்நாடக மாநில துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமானவர் டி.கே.சிவகுமார் வீட்டில் 2017ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து அமலாக்கத்துறை இவர் மீது டெல்லி மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் இன்று முதல் டிச.3 வரை பங்கேற்க வேண்டியிருப்பதால் துபாய் செல்ல அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்தார். டி.கே.சிவகுமாரின் மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விகாஸ் துல், ரூ.5 லட்சம் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும். மேலும் அவர் துபாயில் பயன்படுத்தும் மொபைல் எண் மற்றும் அங்கு மேற்கொள்ளவுள்ள பயண திட்டங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

The post கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் துபாய் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Delhi Court ,Karnataka ,Deputy Chief Minister ,TK Shivakumar ,Dubai ,Bengaluru ,State ,Congress ,President ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...