×

மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கிறது சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் பெட்டி தொழிற்சாலை!!

சென்னை : மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் பெட்டி தொழிற்சாலை தயாரிக்க உள்ளது. 1955-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட இந்த ஐ.சி.எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரெயில் உள்பட பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஜூன் 4ம் தேதி ரயில்வே அமைச்சகத்தில் இருந்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலைக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், 2024-25-ம் ஆண்டு செயல் திட்டத்தில் 250 கி.மீ. வேக ரயிலை தயாரிக்கும் திட்டத்தை சேர்க்க ஐ.சி.எஃப்.க்கு ரயில்வேதுறை ஆணையிட்டுள்ளது. அதன்படி, மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் 2 அதிவேக ரயில்களை முதல்கட்டமாக தயாரிக்குமாறு ஐ.சி.எஃப். நிறுவனத்திற்கு ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

இதையடுத்து வழக்கமான அகலப்பாதைக்கு பதில் 1435 மி.மீ. அகல தண்டவாள பாதைகளில் ஓடக்கூடியதாக அதிவிரைவு ரயில் தயாரிக்கப்பட உள்ளது. 1435 மி.மீ. இடைவெளியில் அமைக்கப்படும் தண்டவாளம் கொண்ட ரயில் பாதை ஸ்டாண்டர்டு பாதை என அழைக்கப்படுகிறது. மணிக்கு 250கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியதாக புதிய அதிவேக ரயில் தயாரிக்கப்பட்டாலும் 220 கி.மீ. வேகத்திலேயே-இயக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் மற்றும் மோனோ ரயில்கள் ஸ்டாண்டர்டு பாதை ரயில்களாகும். வந்தேபாரத் ரயில்களை போல 8 பெட்டிகளைக் கொண்டதாக 250 கி.மீ. அதிவேக ரயில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட உள்ளது. இந்த இரண்டு ரயில்களும் 2025 இறுதிக்குள் வடிவமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கிறது சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் பெட்டி தொழிற்சாலை!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED 125 டிகிரி வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 922...