×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் ஏழை எளியவர்களுக்கு பிரியாணி: ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா வயலாநல்லூர் மற்றும் கோலப்பஞ்சேரியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பூவை ப.ச.கமலேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் ஜெனார்த்தனன், இளையான், வயலை பிரபாகரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வயலாநல்லூர் டி.துரைமுருகன் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ வயலாநல்லூர் ஊராட்சியில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். பிறகு 500 ஏழை, எளியவர்களுக்கு பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கினார்.

இதை தொடர்ந்து கோலப்பஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சி.விஜயபாபு, கிளை செயலாளர் ஆனந்த் ஆகியோர் ஏற்பாட்டில் திமுக கொடியை ஏற்றி வைத்து ஊராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கினார். விழாக்களில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஜெயபாலன், எம்.முத்தமிழ்ச் செல்வன், வி.குமார், ஜி.விமல் வர்ஷன், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர் நாராயண பிரசாத், ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் டி.குமரேசன், ஏ.ஜி.ரவி , திருமலைராஜ், என்.சண்முகம், ஏ.எஸ்.மோகன், பேட்டை கேசவன், பரிமேலழகன், தசரதன், பாபு, வினோத், எலியேசர், செல்வம், சுரேந்தர், வெங்கடேசன், ராமு, கணணன், அஞ்சலி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* பெரிய குப்பத்தில் உள்ள அன்னை தெரேசா பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய மற்றும் காது கேளாத, வாய் பேசாத மாணவ, மாணவிகளுக்கும், திருவள்ளூர், ஆயில்மில் அம்பேத்கர் சிலை அருகே ஏழை, எளிய மக்களுக்கும் பிரியாணி, இனிப்பு மற்றும் கேக் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் டி.ஆர்.திலீபன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். விழாவிற்கு நகர செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அண துணை அமைப்பாளர்கள் மோதிலால், புவனேஷ்குமார், நகர நிர்வாகிகள் கமலக்கண்ணன், ரவி பரசுராமன், ராஜேஸ்வரி கைலாசம், குப்பன், டி.என்.ஆர்.சீனிவாசன், டி.சிவகுமார், பவளவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன், முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன் ஆகியோர் மனவளர்ச்சி குன்றிய மற்றும் காது கேளாத, வாய் பேசாத மாணவ, மாணவிகளுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் பிரியாணி, இனிப்பு மற்றும் கேக் வழங்கினர். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன், பொதுக்குழு உறுப்பினர் சிட்டிபாபு, ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் விஜயகுமார், கோவிந்தம்மாள், நேதாஜி, மாவட்ட பிரதிநிதி கொப்பூர் திலீப்குமார், மோகனசுந்தரம், நந்தகுமார், விஜயகுமார், பாஸ்கர், வேளாங்கண்ணி, தமிழரசி உள்பட வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

* மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் அறுசுவை உணவு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பொருளாளர் தொழுவூர் பா.நரேஷ்குமார் ஏற்பாட்டில் 25, வேப்பம்பட்டில் உள்ள பாலவிகார் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சே.பிரேம் ஆனந்த் தலைமை வகித்தார். நிர்வாகிகள் க.ஜெயராமன், ஜி.ரமேஷ், இ.என்.சேகர், ஆர்.திலீப்ராஜ், தாஸ் (எ) நாராயணசாமி, தெய்வசிகாமணி, பி.அன்பு, கே.சரவணமூர்த்தி, கே.எம்.வி.ஆனந்த் முன்னிலை வகித்தனர். மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் தமிழ்வாணன், நரசிம்மன், சி.தாஸ், சுரேஷ்பாபு, மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் ஏழை எளியவர்களுக்கு பிரியாணி: ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Avadi ,CM Nassar MLA ,Thiruvallur ,Tiruvallur Central District ,Poontamalli ,East Union ,DMK ,Youth Welfare and Sports ,Udhayanidhi Stalin ,CM Nassar ,MLA ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...