×

முல்லைப் பெரியாறு கார் பார்க்கிங் விவகாரம் 3 மாதத்தில் நில அளவீட்டை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள்,’அபய்.என்.ஓஹா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் ‘ஒன்றிய அரசு தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள சர்வேயர், தனது நில அளவு பணிகளை அடுத்த 3 மாதத்திற்குள் முடித்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நிலஅளவை பணிக்காக தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

The post முல்லைப் பெரியாறு கார் பார்க்கிங் விவகாரம் 3 மாதத்தில் நில அளவீட்டை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Mullai Periyar ,New Delhi ,Kerala government ,Mullaip Periyar ,Dinakaran ,
× RELATED முல்லைப்பெரியாறில் கேரளா புதிய அணை...