×

விளைநிலத்தில் புகுந்த காட்டு யானைகள்: விவசாயிகள் பீதி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி அடர் வனப்பகுதியையொட்டி உள்ளது. இதனால் காட்டு யானை, மான், காட்டு மாடு, காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்றிரவு லிங்காபுரம் அடுத்துள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள தயாநிதி (45), ராஜன் (42) உள்ளிட்டோரின் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. இதையறிந்த வனத்துறையினர் அங்கு சென்று அப்பகுதி விவசாயிகள், வாலிபர்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி 2 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து வனவிலங்குகள் நடமாடுவதால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

The post விளைநிலத்தில் புகுந்த காட்டு யானைகள்: விவசாயிகள் பீதி appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Sirumugai ,Coimbatore ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது