×

ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

இஸ்லாமாபாத்: அல்-காதிர் டிரஸ்ட் ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. கடந்த 2019ல் இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, அல்-காதர் டிரஸ்ட் மூலம் கணக்கு காட்டாமல் முறைகேடாக நன்கொடைகளை பெற்றதுஉள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் கடந்த 2022ல் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவர் மீது பல்வேறு பிரிவுகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த செப் 26 முதல் உயர் பாதுகாப்புள்ள ராவல்பின்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அல்-காதிர் டிரஸ்ட் வழக்கில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 19ஆயிரம் கோடி மோசடி செய்ததாக பாக். ஊழல் தடுப்பு ஆணையம் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் சிறையில் உள்ள அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்ததாக பாக். ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரான் கானை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

The post ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Islamabad ,Pakistan ,Al-Qadir Trust ,Dinakaran ,
× RELATED ராகுலை பிரதமராக்க பாக். துடிக்கிறது: பிரதமர் மோடி பிரசாரம்