×

சேர்வலார் காணிகுடியிருப்பு மக்களுக்கு மருத்துவ முகாம்

விகேபுரம், நவ.28: பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள சேர்வலார் காணிகுடியிருப்பில் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா அறிவுரையின் படி ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊர் பெரியவர் மனோகரன் காணி தலைமை வகித்தார். பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் அமுதா, சுத்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய
மருத்துவர் பிரேம் சுபா ஆகியோர் காணி மக்களுக்கு ஆயுர்வேத மருத்துவ முறைகளின் பயன்பாடுகள் பற்றி எடுத்து கூறினர். சிகிச்சை பெற வந்தவர்களுக்கு பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத பிரிவு மருந்து வினியோகிப்பாளர் வனிதா, பல்நோக்கு பணியாளர் செல்வி மருந்துகளை வழங்கினர். முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி அறிவுரையின் படி காரையார் பிரிவு வனவர் ராஜன் மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டனர். சேர்வலார் காணிக்குடியிருப்பு சாவித்திரி நன்றி கூறினார்.

The post சேர்வலார் காணிகுடியிருப்பு மக்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Servalar ,Vikepuram ,Usha ,District Medical Officer ,Servevalar ,Babanasam ,Dinakaran ,
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...