×

அயர்லாந்து எழுத்தாளர் பால் லிஞ்சுக்கு புக்கர் பரிசு

லண்டன்: அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் பால் லிஞ்ச்சின் தீர்க்கதரிசியின் பாடல் என்ற நாவலுக்கு 2023ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு கிடைத்துள்ளது. லண்டனில் நடந்த விழாவில் எழுத்தாளர் லிஞ்ச்சுக்கு புக்கர் விருது பரிசு தொகையாக சுமார் ₹52லட்சம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு புக்கர் பரிசு பெற்ற இலங்கை எழுத்தாளர் ஷேகன் கருணதிலகாவிடம் இருந்து புக்கர் டிராபியை பால் லிஞ்ச் பெற்றுக்கொண்டார். பால் லிஞ்சின் நாவலானது அயர்லாந்தில் போரில் சிக்கிய பெண் தனது குடும்பத்தை பாதுகாக்க போராடியது குறித்ததாகும்.

The post அயர்லாந்து எழுத்தாளர் பால் லிஞ்சுக்கு புக்கர் பரிசு appeared first on Dinakaran.

Tags : Paul Lynch ,London ,
× RELATED பெண் படுகொலை இந்திய வம்சாவளிக்கு ஆயுள் தண்டனை