×
Saravana Stores

முத்துப்பேட்டை கவிஞர் பசீர் அகமது லண்டன் ஜாகிர் இல்ல திருமண விழா குடவாசலில் இன்று நடக்கிறது

 

முத்துப்பேட்டை, ஜூலை 21: முத்துப்பேட்டை கவிஞர் ஜி.பசிர் அகமது மகள் மெர்ஷினா என்ற மணமகளுக்கும், குடவாசல் லண்டன் ஜாகிர் (எ) சையது ஜாகிர் உசேன் மகன் டாக்டர் சையது ஜாஸம் என்ற மணமகனுக்கும் திருமண நிக்காஹ் இன்று (21ம் தேதி) காலை 11.30 மணியளவில் குடவாசல் முகைதீன் ஜாமியா பள்ளிவாசலில் நடைபெறுகிறது. இதில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், மஜக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன்அன்சாரி, எம்எல்ஏகள் மாரிமுத்து, ஷாநவாஸ், முன்னாள் எம்எல்ஏ நிஜாம் முகைதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நண்பர்கள், மருத்துவர்கள், உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், அனைத்து ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள், ஆலிம் பெருமக்கள், மணமக்களின் இரு குடும்பத்தை சார்ந்த உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகன் தந்தை லண்டன் சையது ஜாகிர் உசேன், பெரிய தந்தை சையது சகாபுதீன், மணமகள் தந்தை கவிஞர் பசீர் அகமது, மணமகளின் சகோதரர்கள் தீன்முகமது, முகமது இர்பான் மற்றும் இரு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் செய்து வருகின்றனர்.

The post முத்துப்பேட்டை கவிஞர் பசீர் அகமது லண்டன் ஜாகிர் இல்ல திருமண விழா குடவாசலில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Basir Ahmed ,London ,Jagir House ,Gudawasal ,Muthuppettai ,Nikah ,Mershina ,London Jagir ,Syed Jagir Hussain ,Dr ,Syed Jasam ,Pasir Ahmed ,London Jagir House ,Dinakaran ,
× RELATED லண்டனில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்..!!