×

இலங்கையில் அமைச்சர் பதவி நீக்கம்

கொழும்பு: இலங்கை அதிபர் தன்னை கொலை செய்துவிடுவார் என்று குற்றம்சாட்டிய விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே, நாடாளுமன்றத்தில் பேசியபோது, நான் கொலை செய்யப்பட்டால் அதற்கு அதிபர் விக்ரமசிங்கே தான் பொறுப்பேற்க வேண்டும். சாலையில் நான் படுகொலை செய்யப்பட்டால் அதிபர் மற்றும் அவரது தலைமை அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டும்.

கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் ஊழலை தூய்மைப்படுத்தும் எனது பணிக்காக நான் கொல்லப்படலாம் என அஞ்சுகிறேன்” என்று பேசியிருந்தார். இதனை தொடர்ந்து நடந்த வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடா்ந்து இலங்கை அரசின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவை நியமித்து அதிபர் விக்ரமசிங்கே நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post இலங்கையில் அமைச்சர் பதவி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sri Lanka ,Colombo ,Sports Minister ,Roshan Ranasinghe ,President ,Dinakaran ,
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்