×

மாநகர பேருந்தின் நிகழ்நேர இருப்பிடத்தை அறிய ஐபோனில் ‘சென்னை பஸ்’ செயலி விரைவில் அறிமுகம்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலமாக, ‘சென்னை பஸ்’ செயலி கடந்தாண்டு மே 4ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் பேருந்தின் நிகழ்நேர இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வசதி உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த செயலி ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களால் மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என்ற சூழல் நிலவியது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை பஸ் செயலியை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஐஃபோன் உபயோகிப்பவர்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திட ஏதுவாக டிசம்பர் முதல் வாரம் முதல் iSO தளத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் அடங்கிய பேருந்துகள் வந்து சேரும் நேரம் உள்ளிட்டவைகளை சென்னை பஸ் செயலி துல்லியமாக கண்டறிந்து பயணிகளுக்கு உதவி வருகிறது. குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு இந்த செயலி பெரிதும் உதவி செய்கிறது என்றார்.

The post மாநகர பேருந்தின் நிகழ்நேர இருப்பிடத்தை அறிய ஐபோனில் ‘சென்னை பஸ்’ செயலி விரைவில் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Transport Corporation ,Transport Department ,
× RELATED பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம்...