திருமலை: சித்தூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கேங்மேன் கண்காணித்ததால், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு, விபத்து தவிர்க்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ஆந்திர மாநிலம் சித்தூர் தாண்டி சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் ரயில்வே கேங்மேன் தண்டவாளத்தை கண்காணித்து வந்தார். அப்போது பாகாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை பார்த்து உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ரயில் லோகோ பைலட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், ரயில் நிறுத்தப்பட்டது. தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ரயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக பாகாலா ரயில் நிலையத்தை சென்றடைந்தது.
The post சித்தூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தம்: கேங்மேன் கண்காணித்ததால் விபத்து தவிர்ப்பு appeared first on Dinakaran.
