×

ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்: விஐபி தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு இஸ்திக்கப்பால் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் வருகையால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி 2வது நாளாக நேற்று முன்தினம் துப்ரான் மற்றும் நிர்மலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மோடி சுவாமி தரிசனம் செய்வதற்காக துண்டிகல் விமான நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு திருப்பதி வந்தார்.

விமான நிலையத்தில் அவரை ஆந்திர கவர்னர் அப்துல்நசீர், முதல்வர் ஜெகன்மோகன், துணை முதல்வர் நாராயணசாமி, மற்றும் அமைச்சர்கள், செயல் அதிகாரி தர்மா, எஸ்.பி. பரமேஸ்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் காரில் திருமலை சென்ற பிரதமர் மோடிக்கு, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர், தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா மற்றும் அர்ச்சகர்கள் இஸ்திக்கப்பால் மரியாதை செய்து வரவேற்றனர். அங்கு இரவு தங்கிய பிரதமர் மோடி, நேற்று காலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள், அதிகாரிகள் வேத ஆசீர்வாதம் செய்து பிரசாதம் வழங்கினர். 140 கோடி மக்கள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.பிரதமர் வருகையையொட்டி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சேவைகள் முன்கூட்டியே நடத்தப்பட்டது. வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்: விஐபி தரிசனம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Modi Swami ,Echumalayan Temple ,Tirumala ,Modi Swamy ,Tirupati Eyumalayan temple ,Istikkab.… ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...