×

மகாத்மா காந்தி மகாபுருஷர் நரேந்திர மோடி யுகபுருஷர்: புகழ்ந்து தள்ளும் துணை ஜனாதிபதி

மும்பை: தேசத்தந்தை மகாத்மா காந்தி மகாபுருஷர், பிரதமர் மோடி யுகபுருஷர் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் புகழாரம் சூட்டினார். மும்பையில் நடந்த சமண ஆன்மீகவாதியும், தத்துவஞானியுமான ஸ்ரீமத் ராஜ்சந்திரஜியின் பிறந்தநாள் விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு பேசியதாவது: மகாத்மா காந்தி சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை மூலம் ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்தார். இந்தியாவின் வெற்றிகரமான பிரதமர் மோடி, நாம் எப்போதும் இருக்க விரும்பிய பாதைக்கு நம்மை அழைத்துச் சென்றுள்ளார். நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். சென்ற நூற்றாண்டின் மகாபுருஷர் மகாத்மா காந்தி. நரேந்திர மோடி இந்த நூற்றாண்டின் யுகபுருஷர். இந்த தேசத்தின் வளர்ச்சியை எதிர்க்கும் சக்திகள், இந்த நாட்டின் எழுச்சியை ஜீரணிக்காத சக்திகள் ஒன்றிணைகின்றன. நாட்டில் எப்பொழுது நல்லது நடக்கிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் வேறு வழிக்கு வந்து விடுகிறார்கள் என்றார்.

The post மகாத்மா காந்தி மகாபுருஷர் நரேந்திர மோடி யுகபுருஷர்: புகழ்ந்து தள்ளும் துணை ஜனாதிபதி appeared first on Dinakaran.

Tags : Mahatma Gandhi ,Mahabrusher ,Narendra Modi ,Yukabrusher ,Vice President ,Mumbai ,Jagdeep Tankar ,Modi ,
× RELATED மீனவர்கள் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது...